Wednesday, July 16, 2008

தமிழ்வேங்கை

தமிழ்வேங்கை செய்தித்தளம்

1 comment:

விருபா - Viruba said...

வணக்கம்,

நீங்கள் விருபா தளத்திற்கு இணைப்புக் கொடுத்துள்ளீர்கள்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள்.

ஒன்று தரம் அறிந்து இணைப்புக் கொடுங்கள். வகைப்படுத்துங்கள். அதில் தவறில்லை. அவ்வாறில்லாமல் எல்லாரையும் ஒன்றாக இணைப்புக்கொடுக்க வேண்டாம். அதுவும் இளங்கோவன் அவர்களுடைய வலைப்பூவுடன் சேர்த்து விருபா இணையதளத்தை இணைப்புக் கொடுப்பதை நாம் என்றும் விரும்புவதில்லை. இவ்வாறு இணைப்புக் கொடுத்திருந்த புதுவையைச் சேர்ந்த தமிழ்க்காவல் http://www.thamizhkkaaval.net என்ற இணைய தளத்தில், இவ்வாறு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை நாம் விரும்பாத நிலையில், அவ்விணைய தள அமைப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து எமது தளத்திற்கான இணைப்பை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டு, இப்பொழுது விருபா இணைய தளத்திற்கான இணைப்பு நீக்கப்பட்டுள்ளது.

மு.இளங்கோவனுடைய வெளிச் செயற்பாடுகளை வைத்து பலரும் ஏமாறுகின்றார்கள். அவருடைய வியாபார எண்ணங்களை, தந்திரங்களை, தமிழ் வளர்ப்பதாக அவர் போடும் நாடகங்களை அறிந்தவர்களாக நாம் உள்ளதால், அவ்வாறில்லாத நாம் அவரிடம் இருந்து விலகி நிற்க விரும்புகிறோம். ஒரு கல்லூரியில் எம் முன்னிலையிலேயே விருபா தளத்தை அவருடையதாக அறிவித்த நிகழ்வும் உண்டு. விருபா தளத்தின் உருவாக்கத்திற்கும் அவருக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அவருடைய புத்தகங்களை விருபா தளத்தில் இணைத்தமைக்கான கட்டணத்தைக்கூட அவர் இன்றுவரை தரவில்லை. இதுதான் அவருடைய குணம். தமிழ் ஆசிரியர் என்ற நிலையில் அவர் சிறந்தவராக இருக்கலாம் ஆனால் வியாபாரி. அவருடைய தமிழ் இணையம் தொடர்பிலான அறிவு அந்த அளவிற்கு இல்லை என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது. கிராமங்களில் உள்ள கல்லூரித் தமிழாசிரியர்களுக்கு இவை தெரியாத காரணத்தினாலும், சில வெளிநாடுவாழ்த் தமிழர்களுக்கு அவர்களின் முதுகுசொறிவதற்கும் இவரை விட்டால் வேறு ஆட்கள் இல்லை என்பதுடன் இவருடைய உண்மை முகம் தெரியாமலும் இருப்பதால் இவர் கொண்டாடப்படுகிறார். அதுதான் உண்மை.

இவ்வாறுள்ள மு.இளங்கோவனுடன் சேர்த்து விருபா தளத்தை இணைக்கவேண்டாம்.

எனவே தயவு செய்து விருபா தளத்திற்கான இணைப்பை நீக்குமாறு பணிவுண்டன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுடைய மின்-அஞ்சல் முகவரி தெரியாதமையால் பின்னூட்டப் பெட்டி வழியாக இதனை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.